28 அக்டோபர் 2010

ராஜீவ் காந்தி கொலை: அன்றே எழுதப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம்?

போபால் விஷவாயுக் கசிவு: நாம் அனைவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்களும் நிறையவே உள்ளது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன், மற்றும் ராஜீவ் காந்தியின் கூட்டுச் சதியே இந்த போபால் விஷவாயு தாக்கிய பல சம்பவங்களை மறைத்தது என்றால் ஆச்சரியமாக இல்லையா. இந்தியாவில் போபால் என்ற இடத்தில் யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்றை நிறுவியிருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் என்றாலும் அக் கிராமத்தில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள் என அனைவரும் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அன்று டிசம்பர் 3ம் திகதி 1984, யூனியன் காபைட் தொழிற்சாலை கொள்கலனில் இருந்து திடீரென நச்சுவாயு கசிந்தது. அதனால் பலர் தூக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துபோனார்கள்.
தொழிற்சாலையில் இருந்து மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வாயு கசிந்ததில் 2,259 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8௦௦ பேர் இறந்தனர். ஆகமொத்தத்தில் 3,059 பேர் அல்லது அதற்கும் கூடுதலான அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர் என்பதே உண்மை. அந்த நேரத்தில், நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக தாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததாக ராஜீவ் காந்தி தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் மகளோ, புதல்வரோ, இல்லை அம்மையார் சோனியா காந்தியோ இது குறித்து அதிகம் பேசியது கிடையாது. அப்போது யூனியன் காபைட் உரிமையாளராக வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் இருந்தார்.
வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இச் சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் இந்தியா வந்திருந்தார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவருக்கு பாதுகாப்பு வழங்கி தனி விமானத்தில் டெல்லி கூட்டிச் சென்றது ராஜீவ் அரசு. அங்கு அவருக்கு விருந்துபசாரம் ஒன்றையும் கொடுத்து பின்னர் பத்திரமாக நீயூயோர்க் அனுப்பி வைத்ததும் ராஜீவ் அரசுதான். அவர் கைதுசெய்யப்படவில்லை, அவர் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக தப்பிச்செல்ல உதவியதும் ராஜீவ் அரசாங்கமே !
போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவர், இல்லையேல் லாபம் ஈட்டும் நோக்கில் குறைந்த பாதுகாப்பு கருவிகளோடு நச்சுவாயுக் கொள்கலன்களை கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும் அதில் ஒரு ஞாயம் இருக்கிறது ! ஆனால் எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ளமுடியுமா ? அந்த வெட்கக்கேடான செயலே சோனியா விடையத்தில் தற்போதும் நடக்கிறது.
ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார் ராஜீவ், போதாக்குறைக்கு தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என அடியோடு மறுக்கிறார். வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டதாம் அப்போது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன, அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார் என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ஆக மொத்தத்தில் இவர்கள் இருவருமே ராஜீவுக்கு இவ்விடயம் தெரியும் என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றனர்.
“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுகி விட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.
ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன. இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. (CIA) ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
3000 யிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொனண்ற கொலையாளிக்கு உதவியது இந்திய பீனல் கோட் சட்டப்படி மாபெரும் தவறாகும். குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பதும் ஏன் குற்றவாளியை மறைத்து வைத்திருப்பதும் கூட கடுமையான குற்றமே. இவ் வகையில் வாரன் அன்டர்சனை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பியோட உதவிய ராஜீவ் காந்தியும் ஒரு கொலைக் குற்றவாளியே ! அவர் முறைப்படி நீதி மன்றில் நிறுத்தப்பட்டிருந்தால் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும், ஆனால் அவர் ஆட்சிபீடத்தில் இருந்தால் தப்பித்துக் கொண்டார், தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள் ! அவர் உயிர் பறிக்கப்பட்டது. இதற்காக வருந்துவோர் முதலில் இந்தியாவில் இறந்த 3000 உயிர்களுக்கு பதில் கூறட்டும். ஈழத்தில் இந்திய அமைதிகாக்கும் படையால் இறந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
இதோ இங்கு இணைத்திருக்கிறோமே ஒரு புகைப்படம், இது இந்திய இராணுவத்தின் அட்டூழியப் படம். ஈழத்தில் இன்னும் சில இடங்களில் குர்க்கா இனத்திற்கும் தமிழச்சிகளுக்கும் பிறந்த சீனர் போன்ற தோற்றமுடைய பிள்ளைகள் இருப்பதை அரிதாகக் காணலாம், தற்போதுதான் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்துவிட்டதே, மரபணுப் பரிசோதனை மூலம் சொல்லிவிடலாம், இந்திய குர்க்காப் படையினரால் கற்பழிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் யார் என்று. இத்தனை கொடுமைகளைப் புரிந்த ராஜீவ் என்னும் கொடுங்கோலன் இறப்பு என்பது தமிழரைப் பொறுத்தவரை ஏன் இந்தியர்களைக் பொறுத்தவரை கூட ஒரு விடிவு காலம் என்றே கூறவேண்டும்.
அதிர்வின் ஆசிரியபீடம்.


நன்றி:அதிர்வு இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக