27 அக்டோபர் 2010

சந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: 30 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை!

1998 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவைக் கொலை செய்வதற்காக குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி குண்டுத்தாக்குதலில் 28 பேர் பலியானதோடு சந்திரிக்காவுக்கு ஒரு கண் பார்வை இழந்ததோடு, பலத்த காயத்துக்கும் உள்ளாகியிருந்தார். இதுதவிர மேலும் 80 பேர் காயமடைந்திருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பையே இன்று கொழும்பு மேல் நீதிமன்று வழங்கியுள்ளது.
இத்தாக்குதலை நடத்தியபோது இலங்கேஸ்வரனுக்கு 19 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரே இக்குண்டுத் தாக்குதலுக்கு வேண்டிய வெடிகுண்டுகளை கொழும்புக்குக் கொண்டுவந்துள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்தை இலங்கேஸ்வரன் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு 30 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையான இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக