04 அக்டோபர் 2010

உயர் அதிகாரிக்கு இறைச்சி தேடிச் சென்ற சிப்பாய் கண்ணிவெடியில் பலி.

பலாலி இராணுவப் படைப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இறைச்சி சாப்பிடப் பிரியப்பட்டதால் ஒரு சிப்பாய் கண்ணிவெடியில் சிக்கிப் பலியாகியுள்ளார். கடந்த 27ம் திகதியன்று குறித்த அதிகாரிக்காக வேட்டையாடி இறைச்சியை எடுத்துவரச் சென்ற கொமாண்டோ படைப் பிரிவின் சிப்பாய் ஒருவர் குண்டொன்று வெடித்ததில் உயிரிழந்துள்ளார் என்று இராணுவத் தரப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட உயர் அதிகாரி கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்திற்கு வருவதாக அறிவித்திருந்ததாகவும், அவரது உணவிற்காக வேட்டை இறைச்சித் தேவையெனக் கூறப்பட்டதாகவும் இதனையடுத்து இந்த உயர் அதிகாரிக்கு இறைச்சியை வேட்டையாடுவதற்காக நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பாதுகாப்பற்ற பிரதேசத்திற்கு கமாண்டோப் படையணியின் சில சிப்பாய்கள் சென்றதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் உண்மையான தகவல்களை வெளிவிடாமல் அச்சிப்பாய் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில் இருந்தபோது கண்ணிவெடி வெடித்துப் பலியானார் என்று செய்திகள் வெளியாயின. இவ்வாறான தகவலை வெளிவிடும்படி கூறியதும் அந்த உயர் அதிகாரி தானாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக