24 அக்டோபர் 2010

மாணவர்களைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்க முயற்சி - கோத்தபாய.

இலங்கையின் ஸ்திரநிலையைக் கெடுக்க முயலும் சில சக்திகள் தற்போது மாணவர்களைத் தூண்டிவிட்டு கலகங்களை ஏற்படுத்துவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இத்தீய சக்திகளை மாணவர்கள் அடையாளம் காணவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிடையே காணப்படவேண்டிய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டது. ருகுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்ததுபோல துணை வேந்தரைத் தாக்கும் அளவுக்கு இது உள்ளது. மாணவர்களின் பெற்றோர் அவர்களிடம் எதிர்பார்ப்பது இதுவல்ல என அவர் தெரிவித்தார்.
கணிசமான தொகையினர் செலுத்தும் வரிப்பணமே மாணவர்களின் கல்விக்குச் செலவு செய்யப்படுவதாகக் கூறியுள்ள அவர், இப்பணம் நாட்டின் அபிவிருத்திக்கு வலுவளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் கூறியதோடு, தாம் 8 ஆண்டுகளாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அங்கு எதுவித பகிடிவதையையோ, வகுப்புகளைப் பகிஸ்கரிப்பதையோ காணவில்லை என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக