23 அக்டோபர் 2010

தேசிய தலைவர் தொடர்பாக புதிய பரபரப்பு: காணொளி வெளியானதா?

தமிழீழத் தேசியத் தலைவர் தாடியோடு, தீவுப்பகுதி ஒன்றில் கடற்கரை ஓரமாக நடமாடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளதாகவும், மாவீரர் நாழ் நெருங்குவதால் அவர் மாவிரர் தின உரை நிகழ்த்தவிருப்பதாகவும் பெரும் பரபரப்பு ஒன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஒரு இணையத்தில் அவை வெளியாகியுள்ளதாக மக்கள் அறிந்து, பல பொதுமக்கள் இன்டர்நெட் கஃபேக்குப் போய் பல தமிழ் இணையங்களை பார்வையிட்டுள்ளனர். அத்தோடு அதுபோன்ற எந்தக் காணொளிகளும் வெளியாகவில்லை எனச் சிலர் கூறியும் உள்ளனர்.
வன்னியில் கடந்தவருடம் மே மாதம் 18ம் திகதி தேசிய தலைவர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் சரத்பொன்சேகாவோ அவர் மே 19ம் திகதி கொல்லப்பட்டார் என முரணான தகவலைவெளியிட்டார். மற்றும் அரச தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட உடல் தேசியதலைவரது அல்ல என சில தரப்பினர் வாதிட்டுவருவதும் யாவரும் அறிந்ததே. இதே நேரம் இன்று தமிழ் நாட்டில் உண்டான பரபரப்பால், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு இன்னும் தமிழ் நாட்டிலும் தமிழர்கள் மத்தியிலும் நிலைத்து நிற்பதை தெள்ளத்தெளிவாக எமக்கு காண்பித்து நிற்கிறது.
"சாட்சிகள் அற்ற போர்" என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இன்று வெளியிட்ட சில புகைப்படங்களாலேயே, இன்றைய பரபரப்பு தோன்றியதாக அதிர்வு இணையம் அறிகிறது. சாட்சிகள் அற்ற போர் என்ற அமைப்பு சில புதியபடங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஆனந்தபுரச் சமரில் இறந்த பெண்போராளிகள் உட்பட பலரது உடல்கள் நிர்வாணமான நிலையில் போடப்பட்டுள்ளது தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது. போரில் இறந்த போராளிகளின் சீருடைகள களைந்து அவர்களை அவமானப்படுத்தும் இலங்கை அரச இராணுவத்தினர் போர்குற்றங்கள் புரிந்திருக்கின்றமை இப் புகைப்படத்தில் நன்கு தெரிவதோடு, இறந்த சில போராளிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாகவும் அதிர்வு இணையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இவை ஆனந்த புரச் சமரில், இல்லையேல் புதுமாத்தளான் பிரதேசத்தில் நடைபெற்ற உக்கிரப் போரில் இறந்த போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், பலத்த சந்தேகங்கள் , கேள்விக்குறிகளுக்கு மத்தியில் தேசியத் தலைவர் இருப்புக் குறித்து பலராலும் பேசப்பட்டாலும், அவர் என்ன நினைத்தாரோ அதனை நாம் செய்து முடிப்பதே அவருக்கு தமிழர்கள் கொடுக்கும் பெரும் பரிசாக அமையும், அதுவே எமது நன்றிக்கடனாகவும் இருக்கும். இறப்பு பிறப்பு இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாவீரனாகவே நமது தேசியத் தலைவர் பிரபாகரணை தமிழினம் எப்போதும் பார்க்கிறது என்பதற்கு இதைத் தவிர சான்றுகள் எதையும் சொல்லிவிடமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக