20 அக்டோபர் 2010

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - ஆதாரங்கள் வெளிவருகின்றன!


வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனி உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

  1. மிருகத்தனமான இக் கொலைகள் நடந்து பதினைந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னுமமும் இதற்கான தண்டனை கொலைவெறியருக்குக் கிட்டதது தமிழர் மனதில் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதற்கான நீதி கிடைக்குமா என்பது என்ன நிச்சயம். உலக நாடுகளும் ஐநா சபையும் தமது சுயநலன்களுக்காக பாரமுகம் காட்டுகின்றன. எமக்கு எப்போ நீதி கிட்டும்? யாழ்

    பதிலளிநீக்கு