03 அக்டோபர் 2010

இலங்கையுடனான பான் கி மூனின் புரிந்துணர்வு என்ன?

இலங்கை தொடர்பான கலந்துரையாடலை தடுக்கும் ஐ.நா.வின் நடவடிக்கையானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டிருப்பதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது. ஐ.நா. போர்க்குற்ற நிபுணர் குழுவின் வரையறைகள் பற்றி தனிப்பட்ட சந்திப்பின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் என்ன கூறியிருந்தார் என்பது தொடர்பாக அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பான் கி மூன் தனிப்பட்ட புரிந்துணர்வை எட்டியிருந்தாரா என்பது குறித்து பான் கி மூனின் பேச்சாளரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அதை அவர் தவிர்த்துக் கொண்டார். இதன் மூலம் இலங்கை தொடர்பான கலந்துரையாடலுக்கு ஐ.நா. தடை ஏற்படுத்துவது அதிகரித்து வருவதாக இன்னர் சிற்றிப் பிரஸ் கூறுகிறது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"இது தனிப்பட்ட நாடுகளின் தலைவர்களைப் பொறுத்த விடையம். அவர்கள் எத்தகைய அறிக்கைகளை விரும்புகிறார்களோ அது அவர்களைப் பொறுத்த விடயம்" என்று ஐ.நா.வின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறியுள்ளார். ஆனால் பான் கி மூன் ராஜபக்ஷவுடன் புரிந்துணர்வை எட்டியிருந்தாரா? அதனால் அவர்களின் சந்திப்புத் தொடர்பான பான் கி மூனின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிராத விடயங்களை அவரால் கூற முடிந்ததா? என்பது தொடர்பாக நீசேர்கி பதிலளிக்கவில்லை.
பான் கி மூன் செயலாளர் நாயகமாக வருவதற்கு முன்னர் உட்பட ராஜபக்ஷவுடனான பான் கி மூனின் தொடர்புகள் பற்றி இன்னர் சிற்றி பிரஸ் திரும்பவும் கேட்டது. ஆனால், சந்திப்புகள், விடயங்கள் மற்றும் பான் கி மூன் ராஷபக்ஷவை தனிப்பட்ட நண்பராக கருதுகிறாரா? என்ற கேள்வி குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீசேர்கி தெரிவித்துள்ளார்.
இருவரினதும் சந்திப்புக் குறித்து பான் கி மூனின் ஆலோசகர் நிக்கலஸ் கூறும்போது "அசாதாரணமான அறிக்கை" என்று தெரிவித்திருந்தார். இச்சந்திப்பு தொடர்பான அறிக்கையானது ஐ.நா.வின் ஏனைய அறிக்கைகள் போன்று இல்லாத நிலையில் அதனை வேறு எவ்வாறு விபரிக்க முடியும்? இந்த அசாதாரணமான அறிக்கை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து நீசேர்கியால் விளக்கமளிக்க முடியவில்லை அல்லது முடியாது. அந்த அறிக்கை தயாரிப்பில் நீசேர்கி சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனப்படுகிறது. அப்படியானால் யார் சம்பந்தப்பட்டிருந்தனர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக