05 அக்டோபர் 2010

சரத் நாட்டைவிட்டுப் போனால் மன்னிப்பு-மகிந்த.

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இணங்கும்பட்சத்தில் அவருக்கு மன்னிப்பு வழங்க தாம் தயார் என மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள சரத் பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஊடாகவே மகிந்த இதனை அறிவித்துள்ளார்.
மன்னிப்பு கோராமல் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இணங்கினாலும் பொன்சேகாவை விடுதலை செய்யத் தாம் தயார் எனவும் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதற்கு சரத் பொன்சேகாவை இணங்கச் செய்யுமாறு பொன்சேகாவின் உறவினருக்கு நெருக்கமான பிரசித்திபெற்ற மதகுரு ஒருவர் ஊடாகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த மதகுரு குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
எமக்குக் கிடைப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய, சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கி சிறையில் அடைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை மகிந்தவிற்கு நெருக்கமான எல்லே குணவங்ச தேரரும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக