செந்தமிழன் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பல முறை ஒத்திவைத்த பின்பு இன்று விசாரணைக்கு வந்தது, இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமன் வராத காரணத்தை கூறி இன்னொரு நாளில் வழக்கை ஒத்திவைக்க திட்டமிட்டு இருந்தனர்
இந் நிலையில் சீமான் தரப்பு மூத்த வழக்கறிஞர் ந.நடராசன் 29.10.10 அன்று வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்று சொல்ல அதை அரசு வழக்கறிஞர் ஒத்துக்கொண்ட பிறகு, நீதியரசர் சொக்கலிங்கம், சத்யநாராயண இருவரும் “நீங்கள் இருவரும் ஒத்துக்கொண்டால் கூட இந்த தேதியை நீதி மன்றம் ஒத்துகொள்ளாது, அதே தேதியில் விசாரனைக்கு வந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் இவ்வழக்கை ஒத்திவைப்போம்” (“if though partys is ready, court is not ready on that date also i will adjurn the case again and again “) என்று பகிரங்கமாக நீதிபதிகள் கூறினார்கள்.
இதன் மூலமாக தமிழக அரசு சீமானை வெளியே விட தயாராக இல்லை என்பதும், வருகின்ற தேர்தலில் கூட்டணியை நிர்ணயிக்கும் கருவியாகவே தமிழக அரசு செந்தமிழன் சீமானை கையாள்கிறது என்பதும் தெளிவாகிறது, சீமானை தேசிய பாதுக்காப்பு சிறையில் அடைத்து காங்கிரஸ் அரசோடு தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது இந்த தமிழின விரோத கருணா அரசு, இதன் மூலன் செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுக்காப்பு சட்டம் தேர்தல் சதுரங்க ஆட்டத்திற்காக புனைக்க பட்ட பொய் வழக்கு என்பதும், கருணா தலைமையிலான தமிழக அரசின் நயவஞ்சக தன்மையும் தமிழின துரோகமும் மேலும் ஒரு முறை தெள்ளத்தெளிவாககிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக