12 ஜூன் 2010

தமிழீழ தேசிய சின்னம் தபால் முத்திரையாக அமெரிக்காவில் வெளியீடு.



சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவாக இந்த தபால் முத்திரை வெளியிடப்படுவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் அமெரிக்க குடிமக்களின் கவனத்தை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக