எதிர்வரும் செப்டம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கலந்துகொள்ள, ஜெனரல் சரத் பொன்சேகாவை அனுமதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றம், இந்த மாநாட்டில் பங்கேற்கும் வகையில் சரத் பொன்சேகாவுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தது.இதனை ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற சபாநாயகருமான சாமல் ராஜபக்ஷ அங்கீகரித்திருந்தார்.இந்நிலையில், நாடர்ளுமன்றம் சரத் பொன்சேகாவை அங்கீகரித்திருந்தாலும் நாட்டின் சட்டத்திற்கு அமையவே இந்த விடயத்தில் நடந்து கொள்ள முடியும் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் தடுப்புக் காவலில் உள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்து, குறித்த மாநாட்டுக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கும் தடங்கலை ஏற்படுத்தும் என ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக