வன்னியில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங்கைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இது தொடர்பில் அவரிடம் முறையிட்டுள்ளனர்.
சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதேவேளை குடியமர்த்தப்பட்ட பெண்கள், இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில், அதற்கெதிரான அழுத்தம் கொடுக்க பிரித்தானியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்..
இதற்கிடையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளால் பல குறைபாடுகள் காணப்படுவதாக, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் கவலை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக