11 ஜூன் 2010

நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகிறார்.


ஏப்ரல் -23ல் சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு 50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தலைமறைவுவாழ்க்கை நடத்தி வந்த நித்யானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது அவர் ராம்நகர் சிறையில் இருக்கிறார்.
ராம்நகர் கோர்ட் ஜாமீ்ன் நிராகரித்ததை அடுத்து நித்தியானந்தா கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இன்று விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மையென நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் மனதை புண்படுத்திய நித்யானந்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறிய நீதிபதி, பிடதி ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும், ஆன்மீக சொற்பொழிவாற்றக்கூடாது, 15 நாட்களுக்கு ஒரு முறை பிடதி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும், தனிநபர் ஜாமீனுக்காக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்தார்.
நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டதால் நாளை அல்லது திங்கட்கிழமை நித்யானந்தா விடுதலையாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக