25 ஜூன் 2010

கே.பியின் சிபார்சின் பெயரில் முன்னாள் போராளிகள் சிலர் விடுதலையாகின்றனர்.


வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 25 பேரை அரசு நாளை விடுதலை செய்கின்றது. இவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதனின் சிபாரிசின் பேரில் விடுவிக்கப்படுகின்றார்கள். குமரன் பத்மநாதன் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.அவர் கடந்த 10ஆம் திகதி இப்புனர்வாழ்வு முகாமுக்கு சென்றிருக்கிறார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணயாக அமையக் கூடிய சிலரின் உதவியை அங்கு கோரி இருக்கின்றார். அவர்களும் குமரன் பத்மநாதனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளராக ஒரு காலத்தில் இருந்த போஸ் அவரது சகாக்கள் சகிதம் குமரன் பத்மநாதனின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க முன்வந்துள்ளார்.இந்நிலையில் அரசு 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 25 பேரை நாளை விடுவிக்கின்றது. 50 வயதுக்கு மேற்பட்டவர் என்கிற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மூர்த்தியும் விடுதலை ஆகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் விடுதலைக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக