18 ஜூன் 2010

இலங்கையில் சீனர்களின் பிரசன்னம் இந்தியாவுக்கு ஆபத்து!



இலங்கையின் வட பகுதியில் தொழில்படுகின்ற சீன தொழிலாளர்களின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வட பகுதியில் பணியாற்றுகின்ற சீன தொழிலாளர்கள் சீனாவுக்கான இந்தியா தொடர்பிலான ஒற்றர்களாக செயற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கில் யுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சீன தொழிலாளர்கள் உட்கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளமையை அவர் கண்டித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சீனர்கள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர திட்டத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இலங்கையின் வட பகுதியில் தொழிற்பட அனுமதிக்கப்படுகின்றமை, தென்னிந்தியாவுக்கு பாரிய பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிந்தியாவுக்கும் வட இலங்கைக்கும் இடையில் 20 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
எனவே இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக