தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி சிவகுமாரனின் 36 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற உள்ளது.
தமிழர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள பெளத்த பேரினவாத அரசின் கல்வித் தரைப்படுத்தல் சட்டத்திற்கு எதிராகவும், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும், கொதித்தெழுந்து போராடிய மாணவனான பொன்.சிவகுமாரன் சிங்கள பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 05-06-1974 இல் படுகாயமுற்று பின்னர் யாழ் வைத்தியசாலையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 06-06-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள CANONS HIGH SCHOOL மண்டபத்தில் இடம்பெற உள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வு "செய்து முடி அல்லது செத்து மடி" என்ற தாரக மந்திரத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக "மாணவர் எழுச்சி நாளாக" இளையோர்களால் நடாத்தப்படவுள்ளது.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் அனைத்து பிரித்தானிய தமிழர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழ் இளையோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இடம்: CANONS HIGH SCHOOL,
Saldon Road, Edgware,
Middlesex, HA8 6an
காலம்: 06-06-2010
நேரம்: 3pm - 7pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக