08 ஜூன் 2010

போர்க்குற்றம் தொடர்பான உண்மைகளை கூறுவது என் கடமை,என்கிறார் சரத் பொன்சேகா.


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார் அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார். சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார். தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தால் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக