05 ஜூன் 2010

இலங்கை ஏதிலிகள் என சந்தேகிக்கப்படும் இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் முற்றுகை!


அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. முற்றுகையிடப்பட்ட முதலாவது படகில் 54 அகதிகளும், இரண்டாவதாக முற்றுகையிடப்பட்ட படகில் 28 அகதிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்விரு படகுகளிலும் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பயணித்திருக்கலாமென அவுஸ்திரேலியா அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. முற்றுகையிடப்பட்டுள்ள இரு படகுகளிலும் பயணித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 750 அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தஞ்சம் கோரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்பதை கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக