01 ஜூன் 2010

ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோலர் பதவியை இராஜினாமாச்செய்தார்.

ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (67) திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆப்கானிஸ்தான் மீதான ஜெர்மனியின் நடவடிக்கை குறித்து ஹோர்ஸ்ட் தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. தனது ராஜிநாமா குறித்து செய்தியாளர்களிடம் ஹோர்ஸ்ட் கூறியது: ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், எனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த மக்களுக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த முடிவு குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் தெரிவித்துவிட்டேன். ஜெர்மனி அதிபராக பதவிவகித்ததை எனக்கு கிடைத்த கெüரவமாக கருதுகிறேன் என்று உணர்ச்சிப் பொங்க கூறினார் ஹோர்ஸ்ட். முன்னதாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளுடன் ஸ்திரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள், வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹோர்ஸ்ட் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக