இலங்கைப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை இன்று திங்கட்கிழமை மீண்டும் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டைக் கவனிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் என போருக்குப் பின்னான அரசியலமைப்பு ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இருந்தபோதிலும், முந்தைய அனுபவம் மற்றும் தற்போது கிடைத்த தகவல்களைப் பொறுத்து, இந்த நோக்கங்களை உண்மையில் நிறைவேற்றுவதற்கு அதிகாரமுடைய சர்வதேச பதில்கூறும் கடப்பாட்டுப் பொறிமுறையை அமைப்பது சிறந்தது என நம்புகிறேன். இது இலங்கை மற்றும் பிற இடங்கள் எங்கும் பொது நம்பிக்கையை வளர்க்கும் என நவி பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னர், இடம்பெயர்ந்துள்ள மக்களைத் திருப்பி அனுப்பி மீளக்குடியேற்றம் செய்வதில் சிறிதளவு முன்னேற்றம் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவும், தவறுக்குப் பரிகாரம் செய்யவும் குறிப்பான நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக