தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்-சீமான் அறிக்கை.அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் வீட்டின் முன் இன்று நாம் தமிழர் இயக்கம் சார்பில் காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறுகின்றது.இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்..அமிதாப் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும்,அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் உட்பட அனைவரிடமும் பேசி இணக்கமான,நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறினார்..முற்றுகைப் போராட்டத்தின் விளைவாக நமக்கு சாதகமான சில செய்திகள் வந்த போதும், அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.இது எம்மைக் காயப்படுத்துவதாகவும் எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதாகவும் உள்ளது.ஆகவே எமது கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்ஷா வீட்டின் முன் இன்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.பல நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.அமிதாப்பின் செயலாளர் வந்து எம் இயக்கப் பிரதிநிதிகளுடன் பேசி விட்டு சென்றுள்ளார். மலையாளிகள் நிறைந்த திரைப்பட விருது வழங்கும் iifa கமிட்டியானது எம் இயக்கத்தவர் 4 பேருடன் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.நாம் விரும்புவதும் வேண்டுவதெல்லாம் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த கூடாது,இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தான்.அதை மீறி நடத்த முற்பட்டாலோ,நட்சத்திரங்கள் கலந்து கொள்ள எண்ணினாலோ அவர்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும்.எம் இன மக்களைக்கொன்றொழித்த சிங்கள இனவாதத்தின் கோர முகத்தினை மறைக்கும் முயற்சியில் யார் வந்தாலும் அவர்களை எதிர்த்தும் இன விடுதலைக்கு ஆதரவாயும் எம் குரல் இறுதி வரை ஒலிக்கும்.
11 மே 2010
தமிழர்களுக்கு சாதகமாக முடிவு அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும்.-சீமான்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக