எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் நேற்று காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 56. புத்தளத்தில் காலமான இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். வேக நடை, யாழ்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கு சைக்கிளைப் பின்புறமாகச் செலுத்தியமை, 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒன்றைக் காலில் நின்றமை போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும். இவை தவிர, பூல் டூம் நடனம், நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம், 72 மணி நேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகிய உலக சாதனைகளையும் இவர் படைத்துள்ளார். இவரது புதல்வர் பர்சான். இவரும் உலக சாதனையாளரே. கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி உலக சாதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த போது விஷப்பாம்பு தீண்டி இவர் மரணமானார். இந்நிலையில், நேற்று காலமான பரீட் நசீரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றதாக. அவரது மற்றுமொரு புதல்வரான உலக சாதனையாளர் ரிபாஸ் நசீர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக