29 மே 2010

சிறிலங்காவின் ஆணைக்குழுவை அமெரிக்கா நம்புகிறதாம்-ஹிலாரி.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒழுங்கு முறையாக விசாரிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்ரனை அந்நாட்டுக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உரையாடினார். இருவரும் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்துப் பரஸ்பரம் பேசி உள்ளார்கள்.

இச்சந்திப்புக் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்த போதே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்ரன் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒழுங்கு முறையாக விசாரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:

”இந்த ஆணைக்குழு எமது நம்பிக்கையைப் பாழாக்காத விதத்தில் செயற்பட வேண்டும்.நான்கு தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பிரஜைகளின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் இதன் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

இதன் விசாரணைகள் சுதந்திரமானவையாகவும் , வெளிப்படைத்தன்மை கொண்டனவாகவும்,பாரபட்சம் அற்றனவாகவும், நீதியானவையாகவும் அமைதல் வேண்டும். அமைச்சர் பீரிஸ் ஆணைக்குழு ஒழுங்குமுறையாக விசாரணைகளை நடத்தும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.இலங்கை அதன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக