16 மே 2010

முத்துக்குமார் சிலை திறப்புக்கு கருணாநிதியின் காவல்துறை அனுமதி மறுப்பு!


ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டிப்பட்டியில் இன்று மாலை நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் இந்த சுடரை ஏற்றினார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.
இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். இச்சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்திதங்கராசு உட்பட பலர் கலந்துகொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெற்றது.
பொதுக்கூட்ட மேடை அருகே முத்துக்குமார் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக