19 மே 2010

தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டுமென படைத்தரப்பு உத்தரவு!


சிறிலங்காவில் போர்வெற்றி தினமாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதியன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றித்தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் வன்னிப்பகுதி பாடசாலைகள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கலந்துகொண்டு இராணுத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெரியவருவதாவது:சிறிலங்காவெங்கும் போர் வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கான நாளாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு அருகில் இராணுவத்தின் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அன்றைய நாளில் வன்னியில் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்திலுமிருந்து தலா 20 மாணவர்கள் இந்த நிகழ்வுக்கான ஆனையிறவு பகுதிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.பாடசாலைகளிலிருந்து செல்லவுள்ள இந்த மாணவர்கள் அன்றையதினம் அங்கு நடைபெறவுள்ள நிகழ்வில் அணிநடையாக சென்று அங்கு வரிசையில் நின்றுகொண்டிருக்கவுள்ள சிங்கள இராணுவத்தினர் கால்களில் மலர் தூவி, நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்கு நன்றி கூறவேண்டும் என்று இராணுவத்தின் ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்கு கட்டாயம் அனைத்து பாடசாலைகளிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கட்டாயம் வருகை தரவேண்டும் என்று வன்னியிலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடுமையான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மீளக்குடியமர்வு என்ற பெயரில் வன்னியில் அடிமைகளாக நடத்தப்படும் தமிழ்மக்கள் இப்படியான காரியங்களை நிறைவேற்றினால்தான் அங்கு வாழலாம் என்ற நிலையே காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவித்ததுபுலம் பெயர்ந்த மக்களே உங்கள் அனைவரினதும் ஒன்றினைந்த சக்திதான் எம் சந்ததியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும் என இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக