14 மே 2010

சோனியாவின் காலை நக்கும் நாய்கள்.-பாஜக தலைவர் நிதின் கட்காரி.



முலாயம் சி்ங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் நிதின் கட்காரி. சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்று வர்ணித்து கொள்கிறார்கள். அவர்கள் சிங்கம் அல்ல. சோனியாவின் காலில் விழுந்து அவரது காலையும் காங்கிரசின் காலையும் நக்கி கொண்டிருக்கும் நாய்கள். சி.பி.ஐ. பிடியில் சிக்கியுள்ள அவர்கள் அதிலிருந்து தப்பிக்க சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் லக்னெளவில் உள்ள பாஜக அலுவலகம் மீது சமாஜ்வாடி கட்சியினர் தாக்குதல் நடத்தினர். உபி மற்றும் பிகாரில் கட்காரியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கட்காரிக்கு இரு தலைவர்களும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து நிதின்கட் காரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் சொல்லிய வார்த்தை முலாயம் சிங்கையும், லாலுவையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நான் அவர்களை நாய் என்று சொல்லவில்லை. வழக்கத்தில் உள்ள வார்த்தையைதான் பயன்படுத்தினேன். அதற்கு அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. முலாயமும் லாலுவும் என் மரியாதைக்குரிய தலைவர்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக