25 மே 2010

மலேசியாவில் தவிக்கும் மக்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.-டேவிட் பூபாலபிள்ளை.


மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 ஈழத்தமிழர்களை (பெண்கள், குழந்தைகள் உள்பட) பினாங்கு கடற்கரைக்கு மலேசிய கடற்படை அழைத்து வந்தது. எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி 75 ஈழத்தமிழர்களும் மலேசிய அரசை கேட்டுக்கொண்டனர்.
இதை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், அதன்பிறகு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 61 ஆண்கள் கூறினர்.
இப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 61 ஆண்கள் மட்டும் திங்கள் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இந்த செய்தியை நக்கீரன் இணையதளம் மூலமாக அறிந்த கனடா நாட்டு தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டேவிட், மலேசிய முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர், உங்களை காப்பாற்ற கனடா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் மலேசிய முகாமில் இருந்து மீட்போம். அதனால் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக