16 மே 2010

வன்னி யுத்தத்தில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தெரிந்ததினாலேயே பிரகீத் எக்னேலி கொட கடத்தப்பட்டார்.


வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் நிறு வனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனா தீர வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தார்.தனது சக ஊடகவியலாளர் கடத்தப்பட்டது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,வன்னிப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து செய்திகளை பெற்றுக் கொள்வதற்காக அப்பொழுது வவுனியாவில் கடமையிலிருந்த படைத்தரப்பின் மேஜர் ஒரு வரை நான் பிரகீத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்த மேஜரின் ஊடாக வன்னிப் போர் குறித்த பல தகவல்களை பெற்று பிரகீத் தமது ஊடகத்துக்கு செய்திகளை வழங்கி வந்தார்.இவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்த பிரகீத் ஒரு நாள் இனந்தெரியாதோரால் திடீரென கடத்திச்செல்லப்பட்டார். இச் சம்பவத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்த போது பிரகீத்துக்கு நான் அறிமுகப்படுத்திய வவுனியாவில் கடமையில் ஈடுபட்டிருந்த மேஜர் தொடர்பாக படைத் தரப்பினர் திடீர் விசாரணை ஒன்றை மேற்கொண்ட போது அவரின் கைத் தொலைபேசியில் பிரகீத்தின் தொலை பேசி இலக்கம் இருக்கக் காணப்பட்டு அதன் அடிப் படையில் பிரகீத் கடத்தப்பட்டமை தெரியவந்தது.படைத்தரப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் போர் முனையில் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ற தலைப்பில் பிரகீத் கடத்தப்பட்டதற்கு முன்னர் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதன் காரணமாக படைத் தரப்பினர்களால் இவர் முதல் முறை கடத்தப்பட்டார். இவ்வாறு கடத்தப்பட்ட பிரகீத் குறிப்பிட்ட படைத்தரப்பு மேஜர் வழங்கிய தகவல்கள் எதையும் வெளியிடக் கூடாது என எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இக் கடத்தல் சம்பவம் குறித்து நான் பிரகீத்திடம் கேட்டபோது படையினர் போரின் போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.அத்துடன் ஆயுத களஞ்சியத்துக்கு அடிக்கடி வரும் சிலர் இரசாயன பொருட்களை குண்டுகளினுள் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக வவுனியா ஆயுதக் களஞ்சியம் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த மேற் குறிப்பிட்ட மேஜர் தன்னிடம் கூறியதாக வும் பிரகீத் தெரிவித்தார். இவ்வாறு ஆயுதங்களில் இரசாயனப் பொருள் கள் சேர்க்கப்படுவது களமுனையில் நிற்கும் படையின ருக்குத் தெரியாதென்றும் பிரகீத் என்னிடம் கூறியிருந்தார்.மேற்குறிப்பிட்ட மேஜரிற்கு ஊடாக இத் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதை தெரிந்து கொண்ட படையினர் தன்னைக் கடத்திச் மிரட்டியதாகவும் பிரகீத் என்னிடம் குறிப்பிட்டிருந்தார் என லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக