22 மே 2010

தமிழீழ விடுதலை புலிகளின் மூன்று உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜர்!


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் கப்டனாக இருந்த சிவஞானம் ஐங்கரன் என்பவரும் கதிரவேலு ஜனந்தன் மற்றும் நடேசன் போதிதாசன் ஆகியோரும் கடந்த புதன்கிழமை மவுண்ட் லாவண்யா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி மூவரையும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையிலும் மறியலில் வைக்கும்படி நீதிபதி ஹர்ஷா சேதுங்க பணித்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களைக் கைது செய்த பின்னர் நந்திக்கடலில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றியதாகத் தெரிவித்த போலீஸ், அவற்றை அளிப்பதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் நீதிபதியைக் கேட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் அவற்றை அழித்துவிடும்படி அனுமதி கொடுத்துள்ளாராம்.நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டவர்களில் ஐங்கரன் என்பவர் அவரது 13 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறும் போலீஸ் அவர் தலைவர் வே. பிரபாகரன் உட்பட பல தலைவர்களிடன் பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவித்துள்ளது. கடைசிக் கட்டப் போரில் காயமடைந்த இவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி மவுண்ட் லாவண்யா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் தரப்புக் கூறியுள்ளது.அடுத்த இருவரும் விமானசேவை அலுவலகம் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது கைது செய்யப்பட்டனராம். மேலும் ஐங்கரன் என்பவர் கொடுத்த தகவலை அடுத்தே நந்திக்கடல் பகுதியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிறிலங்கன் போலீஸ் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக