16 மே 2010

குமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் கேணல் கிட்டு அவர்களினது நினைவுத் தூபியும் படைகளால் அழிப்பு!



யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கிட்டுவினதும் நினைவாலயங்களையும் இலங்கை இராணுவம் நேற்று சனிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலங்களில் வட பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அதன் ஒரு அங்கமாக வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளினது நினைவாலயங்களையும், கேணல் கிட்டுவின் நினைவுத்தூபியினையும் முற்றாக அழிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு அவைகளை சேதப்படுத்தியுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அண்மையில் விடுதலைப்புலிகளின் வடமராட்சியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் முற்றாக அழித்துள்ளமை யாவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக