19 மே 2010

இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ காட்சி உண்மையானதுதான் என சிங்கள சிப்பாய் சனல் போர்வுக்கு பேட்டி!







பொதுமக்கள்,சரணடைந்த புலிகளின் தளபதிகள்,கைது செய்யப்பட்டவர்கள் யாவரையும் தாமே சுட்டுக்கொன்றதாக இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் போர் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியான வீடியோக் காட்சிகள் உண்மை என்று தெரிவித்துள்ள சிப்பாய், தமக்கு உயரதிகாரிகளிடமும், மற்றும் அதிகாரமுடையவர்களிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின்பேரிலேயே தாம் இவர்களைக் கொண்றதாகத் தெரிவித்துள்ளார். கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுடப்படும் வீடியோக் காட்சிகளில் உள்ளவர்களை முதலில் எடுத்த புகைப்படத்தையும் அவர் கொடுத்துள்ளார். நீங்கள் யாரை சுட்டீர்கள் என்று சனல் 4 தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, நாங்கள் பொதுமக்களைச் சுட்டோம், புலி உறுபினர்களைச் சுட்டோம், சரணடைய வந்த தலைவர்களையும் சுட்டோம், எந்தவிதமானாலும், யாரும் மிஞ்சக் கூடாது என்பதே தமக்கு வழங்கப்பட்ட உத்தரவு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று இன்றோடு 1 வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், இப்படியானதொரு வலுவான ஆதாரத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியே கொண்டுவந்துள்ளமை பெரும் பாரட்டுதலுக்குரியது. தமிழர்கள் பலவருடம் நடத்திப் பெறவேண்டிய பலனை, சனல் 4 தொலைக்காட்சி 10 நிமிடத்தில் பெற்றுத் தந்துள்ளது, பல மில்லியன் மக்கள் பார்வையிடும் சனல் 4 தொலைக்காட்சியின், இந்த ஒளிபரப்பு, உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் உடனடியாக பிரித்தானிய அரசுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, அதன் தூதுவரூடாக, நடவடிக்கை எடுக்கும்படி பணித்துள்ளது.இந்த ஒளிபரப்பைத் தொடர்ந்து, சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவும் , இதனை மறு ஒளிபரப்பு செய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.தாம் மக்கள் வாழும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்கள் எதனையும் பாவிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தது இலங்கை இராணுவம். (கடந்த வருடம்) இருப்பினும் சனல் 4 தொலைக்காட்சிக்கு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த படங்களில், கடற்கரை ஓரமாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்படுவதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.அத்தோடு இரண்டு பெண்களின் கைகளைக் கட்டி அவர்களை சுட்டுக் கொண்றுள்ள படமும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களின் கைகளைக் கட்டி தலையில் சுடும் காட்சிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது யாவரும் அறிந்ததே. ஆனால் அதில் சுடப்படும் நபர்கள்களை இலங்கை இராணுவம் முதலில் எடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக