14 மே 2010

இம்மானுவல் அடிகளார் மீது குறிவைக்கும் சிங்கள அரசு!




உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார்.
இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோஹான் குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.
அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட ஒருவராக உருத்திரகுமாரன் விளங்குவதாகவும், அவருடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும், விரைவில் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு சிறீலங்கா அரசாங்கத்துடன் அவர் பேசுவார் என்று தான் நம்புவதாகவும், பேராசிரியர் றோஹான் குணரட்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடுகடந்த அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இன்று சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக