17 மே 2010

படைகளின் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் நடைபெற இருந்த அஞ்சலி நிகழ்வுகள் இரத்து!



இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதாக கூறி கொழும்பில் விழா எடுக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்காக நடைபெறவிருந்த சர்வமத பிரார்த்தனை படையினரின் நடமாட்டம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நல்லூர் ஆதீனத்தி;ல் ஆதீன முதல்வர் மற்றும் யாழ்ப்பாண ஆயர் ஆகியோரின் தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெறவிருந்தது
எனினும்,இதற்கு சமுகமளிப்பவர்களை படைத்தரப்பு வீடியோ படம் எடுக்க முயற்சித்தமையை அடுத்து எவரும் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களும் தமது பாதுகாப்பு கருதி இந்த நிகழ்வுக்கு செல்லவில்லை.
இதேவேளை, நாளையதினம் யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் சர்வமதக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று தமிழரசுக் கட்சியின் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு கூருவதற்காக நடத்தப்படவிருந்த நிகழ்வும் படையினரின் நடமாட்டம் காரணமாக நடைபெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக