26 மே 2010

அகதிகள் நூறு பேருடன் அவுஸ்திரேலியா சென்ற கப்பல் கடலில் மூழ்கியதா?




கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2ம் திகதி இந்தோனேசியாவில் இருந்து 100 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சொன்ற படகு, அப்படியே கடலில் மூழ்கி அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தற்போது அவுஸ்திரேலிய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டனர் என்றும் இதுவரை அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வரவில்லை என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி மிச்சல் கார்மொடி அந்நாட்டின் விசாரணைக்குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ள தகவல் ஒன்றின்படியே இச் செய்தி தற்போது கசிந்துள்ளது.இப் படகு புறப்பட்ட சில தினங்களில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இந்தோனேசிய அதிகாரிகள் இது குறித்து அறிவித்ததாகவும், இருப்பினும் பல நாட்கள் கழித்தும் இப் படகு அவுஸ்திரேலியா வராததால், அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் இந்தோனேசியாவை தொடர்புகொண்டு, இக் கப்பலை தேடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக அறியப்படுகிறது. இந்தப் படகு கிறிஸ்மஸ் தீவை ஒரு வேளை சென்றடைந்திருக்குமா? என்று ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்திய போதிலும் அங்கும் அந்தப் படகு வந்திருக்கவில்லை என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2ம் திகதி இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட இப் படகைப் பற்றி, புலம்பெயர் தமிழர்கள் விடயம் அறிந்திருந்தால், அல்லது தற்போது அப் படகு எங்கு நிற்கிறது என்ற விடயம் தெரிந்தால் உடனடியாக கீழ் உள்ள தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்புகொள்ளவும். இப் படகில் பயணித்த அகதிகளின் உறவுகள், மிக ஏக்கத்துடன் இவர்கள் நிலைகுறித்து அறிய பெரிதும் ஆவலாக உள்ளனர். மேற்படி அவர்களுக்கு உதவ அதிர்வு இணையம் ஆவன செய்ய கடமைப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே நீங்கள் அறிந்த விடயத்தை உடனே தெரியப்படுத்துங்கள். 0044 787 331 4360
செய்தி:அதிர்வு இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக