11 மே 2010

பார்வதி அம்மாள் விவகாரம்,மத்திய மாநில அரசுகள் வேதனை தரும் விதமாக நடந்துகொள்கின்றன.-விஜயகாந்த்.


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியாவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் வேதனைப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


இதுகுறிதிது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அன்றைய அதிமுக அரசின் தடை செய்தோர் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்தது என்றால், அதைத் தெரியாமலேயே மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் அனுமதி வழங்கியது எப்படி.
இதுகுறித்து தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தாமல், தான் வழங்கிய விசாவை இந்திய அரசே மதிக்க மறுக்கலாமா?
சிகிச்சைக்கு அனுமதிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பார்வதி அம்மாளுடைய விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் கையாளும் நடவடிக்கைகள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக