12 மே 2010

எம் குரலுக்கு செவிசாய்த்த அமிதாப்பிற்கு நன்றி தெரிவிப்போம்-சீமான்.



எனதருமைத்தமிழர்களே,
இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கியபங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய்ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா வீட்டின் முன் முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்துள்ளது..ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.
இது நமது இயக்கத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் நம் இனப்படுகொலைக்கு எதிராய்ப் போராடிய, தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.நாம் இன்னும் இவ்விஷயத்தில் நிறைய பயணம் செய்ய வேண்டியுள்ள போதிலும் இது முதற்கட்ட வெற்றி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டிப் பிழைக்கும் திராவிடர்களுக்கும்,இங்குள்ள சில பிழைப்புவாத தமிழர்களுக்கும் புரியாத நிலையில்,அவர்களின் செவிட்டு காதில் விழாத நிலையில், எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் புரிந்திருக்கின்றது.அதனை அவர்கள் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்கள்..அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள். அதனை நாம் அவருக்குத்தெரியப்படுத்துவோம்.உடனே செய்வோம்.
இந்த முகவரியில் உங்கள் நன்றியைத்தெரிவியுங்கள்.வாசகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.அனுப்ப வேண்டிய அவரது twitterஇணைய முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது

The Tamil people living all over the world and naam thamilar (We Tamils, Emerging political party) family express our sincere thanks and heartfelt gratitude to the Bachchan family for dropping their plans to participate in the IIFA program in Sri Lanka.
The murderous Rajapakshe regime has committed horrendous human rights violations and destroyed Tamils with no mercy whatsoever. The atrocities committed by the chauvinistic Sinhalese against the Tamils in Lanka are too long to list here. The fascist Rajapakshe regime's genocidal agenda is to wipe out the Tamils who are the original inhabitants of the island of Lanka.
The entire Tamil-speaking world deeply appreciates the solidarity of the Bachchan family for the suffering Tamils in Lanka. The correct moral and ethical stand that the Bachchan family has taken for justice and human rights will be fondly remembered by all people and by naam tamilar party– for ever.


http://bigb.bigadda.com/?p=5175#comment-832270

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக