11 மே 2010

விமானத்தில் கோளாறு,ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார் வைக்கோ!


மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை உரிய நேரத்தில் கவனித்ததால் வைகோ, மதுரை மேயர் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சென்னை செல்வதற்காக வைகோ இன்று காலை மதுரை விமான நிலைத்துக்கு வந்தடைந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி ஐதராபாத்தில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னை சென்று, அதன் பின்னர் ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக மேயர் தேன்மொழி மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருடன் விழாவில் கலந்து கொள்பவர்களும் வந்திருந்தனர். அனைவரும் இன்று காலை 7.30 மணி அளவில் தனியார் விமானத்தில் சென்னை செல்வதற்காக காத்திருந்தனர். 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் வழக்கமான சோதனை நடைப்பெற்றது.
சோதனைக்குப் பின்னர் வைகோ, மேயர் தேன்மொழி உள்ளிட்ட அனைவரும் விமான சீட்டில் அமர்ந்து விமானம் புறப்படுவதற்காக அமர்ந்திருந்தனர். அப்போது நீண்ட நேரம் ஆகியும் விமானம் பேக்கப் ஆகாமல் தாமதமானது. சரியாக விமானம் கிளம்புவதற்கு முன்பாக அவசர அறிவிப்பு ஒன்று வெளியானது. விமானத்தில் முன்பக்க டயர்கள் பழுந்தடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர்கள் அனைவரும் இறக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானத்தின் முன்பக்க சக்கரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் வைகோ, தேன்மொழி உள்ளிட்ட பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பின்னர் 9 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக