28 மே 2010

புலிகளுக்கு ஆதரவாக பேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மீது நடவடிக்கை வேண்டும்-இந்தியா.


மதுரையில் நடந்த நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்குமாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நக்கீரன் இணையதள நிருபர் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது,
‘’ஈழத்திற்காகவும், ஈழத்தமிழர்களுக்காவும் நான் எப்போதும் எங்கேயும் குரல் கொடுப்பேன்.
அதனால்தான் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது. இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களுக்கு முழு அங்கீகாரம்
அளிப்போம்.
ஈழத்தமிழர்கள் விசயமாக நேற்று கூட ஐநா அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக