கடந்த 5 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் சங்கானையில், வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தப்பி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கானையில் உள்ள கடை ஒன்றுக்கு ஆடை வாங்குவதற்காக சென்ற 18 வயதான அராலி மத்தி அராலியை சேர்ந்த கோபாலசிங்கம் தினகரன் என்பவரே இவ்வாறு தப்பி வந்தவராவார்.
கடைக்கு சென்றிருந்த வேளையில் இவரை அணுகிய முதியவர் ஒருவர் துணி ஒன்றை முகத்துக்கு முன்னால் காட்டியதும் தாம் மயக்கமடைந்ததாக சம்பந்தப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று வன்னியில் உள்ள ஒரு இடத்தில் விழித்து பார்த்தபோது வாகனம் ஒன்றில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாகனத்தில் வேறு சிலரும் மயக்கநிலையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வாகனத்தில் இருந்து தப்பி சைக்களில் வந்த ஒருவரின் உதவியுடன் பிரதான வீதிக்கு வந்து பஸ்ஸில் ஏறி கிளிநொச்சி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞருக்கு எவ்வித ஊறும் விளைவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக