27 மே 2010

சர்வதேச நீதி மாசுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!


சர்வதேச நீதி மாசுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை விமர்சனம் வெளியிட்டுள்ளது. தாம் வெளியிட்டுள்ள 111 பக்கங்களை கொண்ட சித்திரவதை தொடர்பான அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை சில பலமிக்க அரசாங்கங்கள் மூடிமறைத்துள்ளதாக மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் தலையிடவில்லை என்பதை அந்த சபை குறைகூறியுள்ளது.
இலங்கையின் இறுதிப்போர்க்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அந்த வேளையில் ரத்தவெள்ளம் ஏற்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டமையையும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, யோசனை ஒன்று நிறைவேற்ற முயற்சித்தமையை மன்னிப்பு சபை வரவேற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக