31 மே 2010

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் பாரியார் இலங்கையில்!



தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி, மங்கையற்கரசி அமிர்தலிங்கம் மற்றும் அவரது மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் லண்டனில் இருந்து விடுமுறையில் இலங்கை வந்துள்ளனர்.
அவர் இலங்கை வந்ததுதும், தமது கணவர் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலாளராக இருந்த டீ ஏ நிசங்க என்பவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் திகதி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 3 ஆயுததாரிகளால் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லபட்டார். அவருடன் தமிழர் விடுதலை கூட்டணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான வெற்றிவேலு யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் போது அப்பாப்பிள்ளைக்கு தனிப்பட்ட காவலாளியாக இருந்த சிங்கள இனத்தவரான நிஷங்க, இந்த தாக்குதலை மேற்கொண்ட 3 பேரையும் தமது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறினர். தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள அமிர்தலிங்கத்தின் மனைவி, தொடர்ந்து இலங்கையில் தங்க விரும்புகின்ற போதும், தமது பிள்ளைகள் இங்கிலாந்தில் குடியேறி இருப்பதால் தம்மால் அது முடியாது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக