23 ஜூன் 2010

ஐ.நா.வின் நிபுணர் குழு வெறும் கண்துடைப்பு நாடகம்!



இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து கண்டனம் தெரிவிக்கும் தரப்புகளுக்கு பதில் வழங்கும் பொருட்டே, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தமக்கு இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற செய்தி ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசிர்கியை இது தொடர்பில் வினவியது.
தொடர்ந்து விளக்கமளித்த அவர்,
இந்த சபை இலங்கைக்கு பயணிக்கும் எண்ணத்தையோ யாரையேனும் விசாரணை நடத்தும் எண்ணத்திலோ உருவாக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதன் போது இந்த குழு சரத் பொன்சேகாவை யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரிக்கவோ, அல்லது தொடர்பு கொள்ளவோ செய்யுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவ்வாறான நோக்கம் எதுவும் இந்த குழுவுக்கு இல்லை என தெரிவித்த பேச்சாளர்,
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து கண்டனம் வெளியிடுகின்ற தரப்பினருக்கு பதிலளிக்கும் பொருட்டே இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த குழு, முக்கியமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாலித்த கோஹன, விஜய் நம்பியார் போன்ற அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக