இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்விதி மீறல்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய மூவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டதற்கு நோர்வே அரசு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர்கள் குழுவிடம் பேசிய சர்வதேச அபிவிருத்திக்கான நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மே தமது ஆதரவை இன்று வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வல்லுநர் குழுவுக்கு சர்வதேச அளவிலும் பரந்த ஆதரவு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்மின் முயற்சியினாலேயே 2002 ஆம் ஆண்டில் தற்காலிக போர் நிறுத்தம் வந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்டப் போரையும் நிறுத்த வேண்டுமென இவர் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார். ஆனால் குறித்த வல்லுநர் குழுவுக்கு ரஷ்ய அரசு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக