01 ஜூன் 2010

காணாமல் போனோர் என பதியப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ்!


இலங்கையில் யுத்த சூழலில் காணாமல் போனோர் எனப் பதியப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தது. இலங்கையில் யுத்த சூழலில் காணமல் போனோர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, மேற்படிக் குழுவைச் சார்ந்த புதிய இடது சாரி முன்னணி உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். காணாமல் போனவர்கள் எனப் பதியப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் மரணச்சான்றிதழுடன் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போயுள்ள ஒருவர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏழு வருடங்களின் பின்னரே மரணச்சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமுலுக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக