இன்னமும் எதிர்க்கட்சி பக்கமே உள்ள ஸ்ரீரங்காவுக்கு அரச தரப்பு கொடுத்துவரும் முக்கியத்துவம் சகலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நியூயோர்க் சென்றுள்ள இலங்கைக் குழுவிலும் ஸ்ரீரங்கா இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவரது மகன் நாமலுக்கு அருகிலேயே செல்லுமிடமெங்கும் திரிகிறார் ஸ்ரீரங்கா. ஐ.தே.க கட்சி சார்பில் சென்றுள்ள தலைமை கொரடாவான ஜோன் அமரதுங்கவை நியூயோர்க்கில் நடக்கும் அரச தலைவர்களுடனான சந்திப்புகளில் காணவே முடியவில்லை. அந்தளவுக்கு ஸ்ரீரங்காவிற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஈரான் அதிபர், நோர்வே பிரதமர் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் மஹிந்த நடத்திய பேச்சுக்களிலும் ஸ்ரீரங்கா பிரசன்னமாகியிருந்தார். எனவே புதிய தமிழர்களை தனது அரசில் நுழைப்பதற்கான புதிய திட்டத்துடன் மஹிந்த செயற்பட்டு வருவது தெரிகிறது. ஆனால் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்த டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு இவ்வாறான ஒரு முக்கியத்துவமோ அதிகாரமோ என்றும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களை அரசு தற்போது புறந்தள்ளி வருவதும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷவுடனும் ஸ்ரீரங்கா கூட்டாகச் சென்று அங்கு நடந்த பல நிகழ்வுகளில் முன்னின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்கிடையில் வருகின்ற நவம்பர் மாதம் அமையவுள்ள புதிய பாராளுமன்றில் ஸ்ரீரங்காவுக்கு இதே முக்கியத்துவம் வழங்கப்பட்டு நல்லதொரு பதவியும் ஒதுக்கப்படும் என்று அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
நாமும் ஏதோ கனவு கண்டோம் இவர் ஏதோ தமிழ் மக்களுக்கு புடுங்கிக் கொடுக்கப் போகிறார், ஏதாவது செய்வார் என்று சந்தோசப் பட்டோம். கடைசில் இதுவும் அந்த அசிங்க கொலைகார குட்டையில் ஊரமுயலும் ஒரு கேவல மட்டை தான் என்பது புரிகிறது.
பதிலளிநீக்கு