29 செப்டம்பர் 2010

புலிகள் உறுப்பினர் 17பேருடன் பசுபிக் கடலில் மிதக்கும் தோணி.

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 17 பேரைக் கொண்ட சிறிய ரக தோணி ஒன்று பசுபிக் பெருங்கடலில் பல நாட்களாக பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. "பாலா" என்று அழைக்கப்படும் கடத்தல் காரர்களின் உதவியோடு இத் தோணி பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு புலனாய்வுச் செய்திகள் கிடைத்திருப்பதாக மேலும் அது தெரிவித்துள்ளது. சிறிய ரக மரத்தால் ஆன தோணி என்றபடியால் அது கடலைக் கடக்க கஷ்டப்படுவதாகவும் விரைவில் அது ஒரு நாட்டைச் சென்றடையும் எனவும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
பாலா என்றழைக்கப்படும் கடத்தல் காரர்கள் தற்போது இந்தியாவில் இருந்து இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து ஊடாக மக்களைக் கடத்தும் ஒரு அமைப்பாக மாறிவருவதாக அறியப்படுகிறது. இவ்வமைக்கு குறித்து மேலதிக தகவல்கள் எதனையும் அதுவெளியிட மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக