விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவுடன் சேர்ந்து விலகிவந்து, பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியுள்ள பிள்ளையான் இடைக்கிடை அரசாங்கத்துடனும் முறுகியதுண்டு. அரசும் தனக்கு தேர்தல் வேலைகளில் உதவி தேவைப்படும்போது மட்டும் பிள்ளையானைப் பயன்படுத்தி வந்தது. ஆனால் இப்போது பிள்ளையானை உயிருடன் 'புதைக்க' குழி தோண்டும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்காக பிள்ளையான் எவ்வழிகளில் நிதியைத் திரட்டுகிறார் என்று விசாரணை செய்யுமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதேவேளை பிள்ளையானின் நிர்வாகத்தின்கீழ் நடந்த லஞ்சம் மற்றும் மோசடிகளையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. எனவே இவ்வழிகளின்மூலம் பிள்ளையானின் முதலமைச்சர் பதவியை அரசு பிடுங்க முனைகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக