தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென பெல்லன்வில விமலரதன தேரர் சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
தமது தாய் மொழியை விரும்பியவாறு பயன்படுத்த முடியாது தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுடடி;க்காட்டியுள்ளார்.
பெல்லன்வில விமலரத்ன தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் மாநாயக்கராகவும் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிப் பிரச்சினைகளின் போது தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிட்டவில்லை என்பதனை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குறித்த சர்வதேச ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற போதிலும், தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக