30 செப்டம்பர் 2010

உலகத் தலைவர்கள் மகிந்தவை மதிக்கவில்லை: சிங்கள ஊடகம்.

உலகத் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மதிக்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகளின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதியை, உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனவும் சிங்கள இணைய தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இதுவரை காலமும் காணப்பட்ட நற்பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துபசாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மோசடியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடீன் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். ஈரானிய அமைச்சரும் குறித்த வைபவத்தில் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் நட்புறவு நாடுகளெனத் தெரிவிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இலங்கை ஒழுங்கு செய்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் அரசாங்கத்திற்கு சார்பான இலங்கையர்கள் பங்கேற்கும் ஒர் நிகழ்வாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு மாற்றமடைந்தததாகவும், கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் செயலளாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பதற்கு இலங்கை கடுமையான முயற்சி மேற்கொண்டு இறுதியில் வெற்றியடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பராக் ஒபாமாவின் உரையின் போது நிரம்பி வழிந்த சபை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது பல இருக்கைகள் காலியாக இருந்ததென குறித்த சிங்கள இணைய தளம் சுட்டிக்காட்டியள்ளது.
ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்குக் கூட பல அரச தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. அட இந்த நாயை மனிசன் மதிப்பானா? கதறக் கதற பிஞ்சுகளையும் பெண்களையும் அழித்தவன் என்பது உலகிற்கு தெரிந்தபின்னும்.

    பதிலளிநீக்கு