15 செப்டம்பர் 2010

இலங்கையில் மனித உரிமை மீறலினை தொடர்ந்தும் அவதானிக்கின்றோம். பிரித்தானியா!

நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இதில் மக்களின் மனிதாபிமான பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் குறித்து பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வட பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரித்தானியா அதிகூடிய கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவென 13.5 மில்லியன் பவுன்களை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்னளுடன் இணைந்து துரிதமாக செயற்பட்டு வருவதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக